தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் விடுதலையை எதிர்த்து சிபிஐ மனு : விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட்

டெல்லி : டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 23 பேரின் விடுதலையை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்ததற்கான உரிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 23 பேரை கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இந்த நிலையில், கெஜ்ரிவால் உள்பட 23 பேரின் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.

Advertisement

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சார்பாக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, 'கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது சட்டத்திற்குப் புறம்பானது. வழக்கின் உண்மைத்தன்மையை முழுமையான விசாரணை மூலம் கண்டறியாமல், வழக்கின் ஆரம்பக்கட்டத்திலேயே அவர்களை விடுவித்தது தவறு. இந்த மதுபானக் கொள்கை வழக்கு நாட்டின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று. இந்த மதுபானக் கொள்கைக்காக ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன,' என்று கூறினார்.இதைத் தொடர்ந்து, சிபிஐயின் மனு விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Related News