டெல்லி கார் வெடிப்புக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்!!
டெல்லி: டெல்லி கார் வெடிப்புக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தலைநகரில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு வெள்ள நிற ஹுண்டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமபதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதை நிறுத்திவிட்டு பிரதமர் மோடி பூடான் சென்றது ஏன்..? என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நடந்தது தீவிரவாதி தாக்குதல் என்பதை கூட அரசால் தீர்மானிக்க முடியவில்லை என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் நாடு ஏக்கத்தன சூழலில் உள்ளபோதும் பிரதமர் பூடான் சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை என்றும் சுப்ரியா ஷ்ரினேட் சாடியிருக்கிறார்.
