Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தோல்வியை ஒத்துக்கிட்டாரு எடப்பாடி: விஜய் ஆடுவார்... பாடுவார்...நடிப்பார்... ஓட்டு வாங்க மாட்டார்... அமைச்சர் பிளாஸ்ட்

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பார்க்கிறேன். அவர் கொடுக்கும் வாக்குறுதி அவரது ஆட்சி காலத்திலேயே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள். நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து சொன்ன வாக்குறுதிகளை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். அன்று பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று சொன்னவுடன் எப்படி சாத்தியம், ஆட்சி முடங்கி விடும் என்று கூறிய எடப்பாடி, இன்று ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று தெரிவித்துள்ளார். அன்று எல்லாவற்றையும் சாத்தியமில்லை என்று சொன்ன எடப்பாடியின் வாய் இன்று பல்வேறுவற்றை வாக்குறுதியாக கொடுத்து வருகிறார். அவர் முழுக்க முழுக்க பொய் சொல்கிறார். எடப்பாடியால் அவர் சொல்லும் ஒன்றை கூட நிறைவேற்ற முடியாது. அவரது காலத்திலும் இதை நிறைவேற்ற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

‘திருக்குறளை கூறுவார், திருக்குறளை மொழிபெயர்ப்பார், எதை வேண்டுமானாலும் மொழிபெயர்ப்பார். எப்படி வேண்டுமானாலும் ஆடுவார், பாடுவார், நடிப்பார் ஆனால் மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது.5 ஓட்டை கூட வாங்க முடியாத சுயேச்சை வேட்பாளர் கூட தான் வெற்றி பெறுவேன் என்றுதான் கூறுவார். தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும். அதேபோல் தான் தவெகவின் நிலைமை தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும், வந்த பிறகு பார்க்கலாம்’ என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

* என்னைய விட்ருங்க... ப்ளீஸ்...

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, திருச்செந்தூர் கோயிலில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் உலக நன்மைக்காக வழிபட வந்ததாக கூறி என்னைய விட்டுருங்கப்பா ப்ளீஸ்... என சொல்லாத குறையாக நழுவி சென்றார். ஆனாலும் அவரை விடாத செய்தியாளர்கள், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னீர்களே...தையே முடிய போகுதே என்ற கேட்டனர். அதற்கு ஓபிஎஸ், இன்னும் 10 நாட்கள் இருக்கிறது என்று கூறிவிட்டு சென்றார்.

* தலைவர்கள் இன்று

முதல்வர் மு.க.ஸ்டாலின் - சென்னை

எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) - சென்னை

செல்வபெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்) - சென்னை

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) - சென்னை

நயினார் நாகேந்திரன் (பாஜக தலைவர்) - சென்னை

பெ.சண்முகம் (சி.பி.எம்.மாநில செயலாளர்) - சென்னை

மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) - சென்னை

திருமாவளவன் (வி.சி.க தலைவர்) - டெல்லி

பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) - சென்னை

அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்) - சென்னை

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்) - டெல்லி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்- சென்னை

விஜய் (தவெக தலைவர்) - பனையூர்