விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 3 மணிநேரம் விசாரணை; தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது அதை மூடி மறைக்க இந்த டிராமா: திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேச்சு
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் ஆகியோர் அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சம்மன் அனுப்பப் பட்டதை தொடர்ந்து இருவரும் நேற்று காலை 11 மணிக்கு சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் நேரில் ஆஜரானார்கள். 3 மணி நேரம் விசாரணை நடந்தது.
இதன் பின் ஆ.ராசா நிருபர்களிடம் கூறியதாவது:
என்னிடம் எப்ஐஆரை கொடுக்கவில்லை. இந்த சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் இருப்பவர்கள் எல்லாம் பாவம், எங்கிருந்தோ போன் வருகிறது. அன்பில் மகேஷ் சிறைக்கு சென்றது. எங்களை அழைத்தது, எல்லாம் டிராமா. சந்தி சிரிக்கும் சட்டம் -ஒழுங்கு, விலைவாசி உயர்வு இதை எல்லாம் மூடி மறைக்கத்தான் இதுபோன்ற ‘டேக் டைவர்ஷன்’. பாவம் சார் முதலமைச்சர். அந்த தம்பியை,, இன்னும் கொஞ்ச நாட்கள் தான் விடுங்க..


