Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்திரமேரூர் அருகே வழி தவறி வந்த புள்ளிமான் கிணற்றில் விழுந்து இறந்தது

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் இன்று காலை ஒரு புள்ளி மான் வழிதவறி வந்து விழுந்தது. இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள், உடனடியாக உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை மீட்டனர்.

அப்போது மான் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து மதுராந்தகம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததும், இறந்த புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது. இந்த மான், இப்பகுதியில் உள்ள தலவாரம்பூண்டியில் காப்பு காட்டு பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. புள்ளிமான் இறந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது.