"தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்" - அமைச்சர் தமிழன் பார்த்திபன் பேட்டி
சென்னை: தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது பேசிய அவர்; தீபாவளியை முன்னிட்டு 7427 சிறப்பு பேருந்துகள் உள்பட 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நவ.5 முதல் 7 வரை 15,659 பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகையையொட்டி நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு செய்த பயணிகள் சென்னையில் 16 இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படும் என்பதை செயலி மூலம் அறியலாம். தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். பயணிகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


