Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வீட்டுமனையை மாற்றி பத்திரப்பதிவு; ரூ.12 லட்ச ரூபாயை இழந்த மூதாட்டி திருவள்ளூர் கலெக்டர் ஆபீசில் கதறல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் பானுமதி(65). இவர், கடம்பத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துப்புரவு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். பணியின் காரணமாக தனக்கு வந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துவைத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், கடம்பத்தூரில் வீட்டுமனை விற்பனைக்கு உள்ளதாக கூறி, அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், ரகுராஜ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் 12 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயை பானுமதியிடம் வாங்கிக்கொண்டு பானுமதி கேட்ட மனைக்கு பதிலாக வேறு வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். ‘’தான் கேட்ட வீட்டுமனையை தராமல் வேறு வீட்டுமனை தேவை இல்லை’’ என்று பானுமதி கூறியதால் அப்படியென்றால் உங்கள் பணத்தை 3 மாதத்தில் திருப்பித் தந்துவிடுகிறோம் என்று கூறிவிட்டு பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.

இதுசம்பந்தமாக பானுமதி கொடுத்த புகாரின்படி, கடம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வந்து பானுமதி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், ‘’நான் 105 வயது தாயுடன் தனியாக வசித்து வருகிறேன். குடும்ப செலவு, சாப்பாட்டுக்கு சிரமப்படுகிறோம். எனவே மோசடி செய்த நபர்களிடம் இருந்து 12 லட்சத்து 94 ஆயிரத்தை பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்து உள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.