Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோட்டார் சைக்கிள்களின் விலையை உயர்த்த முக்கிய நிறுவனம் முடிவு!

டுகாட்டி இந்தியா நிறுவனம், தனது மோட்டார் சைக்கிள்களின் விலையை வரும் ஜூன் மாதம் முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் நடப்பு ஆண்டு இறுதிக்குள் பல மாடல்களை களமிளக்க முடிவு செய்துள்ளது. மான்ஸ்டர் வி2, ஹைபர்மோட்டார்டு வி2, டெசர்ட் எக்ஸ் வி2 மற்றும் புதிய மல்டிஸ்டிராடா வி4 ரேலி ஆகியவற்றின் புதிய வேரியண்ட்கள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் வர இருக்கின்றன. இந்நிலையில், விலைவாசி உயர்வு, இயக்க செலவு அதிகரிப்பு, மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பைக்குகளின் விலை உயர்த்தப்படுவதாகவும், இது வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் எனவும் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.