புதுடெல்லி: ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு தற்போது ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சிராக் பாஸ்வானுக்கு கொலை மிரட்டல் விடுத்து மர்ம கடிதம் ஒன்று அவரது அலுவலகத்துக்கு நேற்று வந்தது. அதில், “நீங்கள் விரைவில் பயங்கரவாதிகளால் கொல்லப்படுவீர்கள்” என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.கையெழுத்து இல்லாத அந்த கடிதத்தில் 2 செல்போன் எண்களும் இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து மிரட்டல் தகவலின் உண்மைத் தன்மை, அது அனுப்பப்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் அலுவலகம் கோரியுள்ளது.மேலும், அமைச்சரின் பாதுகாப்பை மறுஆய்வு செய்து, தேவையான அளவு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான கடிதத்தின் நகல் மத்திய உள்துறை அமைச்சரின் தனிச் செயலருக்கும் டெல்லி காவல் ஆணையருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.



