Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பு அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மூன்று சதவிகித அகவிலைப்படி உயர்த்தி அறிவித்ததற்கு பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படியை 1.7.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுகிறார்கள்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அகவிலைப்படி உயர்வை அறிவித்ததையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு சட்டமன்ற செயலக நிருபர்கள் சங்கம், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சு பணி அலுவலர்கள் சங்கம்,

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், ஜே.எஸ்.ஆர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நர்சுகள் பொதுநல சங்கம், தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒன்றியம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளர் கழகம், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் சங்கம், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம்,

தமிழ்நாடு அரசு தேர்வு துறை பணியாளர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு நெட் செட் பிஎச்டி ஆசிரியர்கள் சங்கம், தீபம், டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு வட்டார கல்வி அலுவலர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது, தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், மனிதவள மேலாண்மை துறை செயலாளர் சுப்பையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.