Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

13 நாள்கள் நடத்தப்பட்ட அமெரிக்க தாக்குதலுக்கு ஓய்வு

கெய்ரோ: தொடர்ந்து 13 நாள்கள் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு புதிய தாக்குதல் நடைபெறவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இடைக்கால போர்நிறுத்தம் முறிந்ததை தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. 3-வது நாளாக இரு நாடுகளிடையே சண்டை நடந்தது. நேற்று முன்தினம் ஈரான் வடபகுதியில் புரட்சிகர காவல்படைக்கு சொந்தமான கடற்படை தளம் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின.

கேஷம் தீவிலும், விமான தளமும், அணுஆயுத தளமுமான இஸ்பஹான் மாகாணத்திலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் குசேஸ்தான் மாகாணம், பார்ஸ் மாகாணம் ஆகியவற்றிலும் வெடிச்சத்தம் கேட்டது.இந்த நிலையில், கடந்த 13 நாட்களாகத் தொடர்ச்சியாக இரவுகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமெரிக்கா நேற்று முன்தினம் இரவு எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை. ஈரானில் நேற்று முன்தினம் இரவு அமைதியாக கழிந்தது என்று ஈரான் சுகாதார துறை செய்தி தொடர்பாளர் ஹோசைன் கெர்மான்போர் தெரிவித்தார்.