Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சி-விஜில் செயலி!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக 40 தொகுதிகளிலும் நடைபெறப் போகிறது. தேர்தல் சமயத்தில் நடக்கும் பணப் பட்டுவாடா, கள்ள ஓட்டு பிரச்னை, உள்ளிட்ட தேர்தல் குற்றங்களை நேரடியாகத் தேர்தல் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்க விரும்பினால் 102 என்னும் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு தெரிவிக்கலாம். தினமும் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாக்காளர் உதவி மைய எண். 1950 என்ற எண்ணிலும், தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள c.VIGIL செயலி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். விதிமீறல் புகார் தொடர்பாக பெறப்பட்ட மொத்த புகார்களில், 99 சதவீத புகார்களுக்கு தேர்தல் கமிஷன் தீர்வு கண்டுள்ளது. இதில், 89 சதவீத புகார்கள் 100 நிமிடத்துக்கு உள்ளாகவே முடிவு எடுக்கப்பட்டது.