Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடப்பு ஆண்டில் நெற்பயிரில் 824 எக்டேர் பரப்பு விதை பண்ணை இலக்கு நிர்ணயம்

*தேளூர் வயல் ஆய்வில் இணை இயக்குனர் தகவல்

ஜெயங்கொண்டம் : நடப்பு ஆண்டில் நெற்பயிரில் 824 எக்டேர் பரப்பு விதை பண்ணை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சென்னை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு இணை இயக்குநர் சாந்தி தெரிவித்தார்.அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகள் கிடைப்பதற்கு ஏதுவாக விதைப்பண்ணை வயல்கள் அமைக்கப்பட்டு சான்று விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்விதைப்பண்ணை வயல்கள் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தரமான சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் நெற்பயிரில் 824 எக்டேர் பரப்பு விதைப்பண்ணை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 204 எக்டேர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் வட்டாரம், தேளூர் கிராமத்தில் காசிநாதன் மகன் கனகராஜ் என்பவரது வயலில் அமைக்கப்பட்டுள்ள சிஆர் 1009 சப் 1 நெல் விதைப்பண்ணை வயலை சென்னை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு இணை இயக்குநர் .

சாந்தி ஆய்வு செய்தார்.ஆய்வில், ஆதார விதை, பயிர் விலகு தூரம், சாகுபடி பரப்பு, பிற ரக கலவன்கள், பூச்சி நோய் தாக்குதல் நிலை குறித்து ஆய்வு செய்தார். மேலும், நிலக்கடலையில் அழகரசன் என்பவரது வயலில் உற்பத்தி செய்யப்பட்ட விஆர் ஹெச்ஓ வயல்மட்ட சான்று விதைகளை ஆய்வு செய்தார்.

மேலும், சரியான மூல விதைகளை பயன்படுத்துதல், முறையாக கலவன்களை நீக்குதல், குறித்த காலத்தில் வயலாய்வு மேற்கொள்ளுதல், உரிய காலத்தில் முறையாக விதை அறுவடை செய்தல், சரியான ஈரப்பதத்தை பராமரிக்க உலர்த்துதல்.

உரிய காலத்தில் வயல்மட்ட ஆய்வு அறிக்கை வழங்குதல் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.ஆய்வில் பெரம்பலூர், விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் தரணிகாமாட்சி, விதைச்சான்று அலுவலர்கள் .இராஜேந்திரன், தமிழ்குமார் மற்றும் அரியலூர் வட்டார உதவி விதை அலுவலர் பாரி ஆகியோர் உடன் இருந்தனர்.