கடலூர் அருகே வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக 13 பேருக்கு சம்மன்!
விபத்து குறித்து ரயில்வே உயரதிகாரிகளும், ரயில்வே போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கோட்டை ரயில்வே போலீசார் சார்பில் முதற்கட்டமாக 13 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, ஆலப்பாக்கம் ரயில் நிலைய அதிகாரிகள் அஜித்குமார், விமல், பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர், ரயில் ஓட்டுநர் சக்திகுமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் மீனா உள்ளிட்ட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் ஆலப்பாக்கம் ரயில் நிலைய அதிகாரி விமல் இன்று விசாரணைக்காக சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் திருச்சி கோட்டை ரயில்வே அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின் முடிவிற்கு பிறகு அடுத்தகட்ட விசாரணையை துவக்கி அதன்பின் எவ்வாறு விபத்து நடந்தது என்பது குறித்து தெரியவரும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.