கடலூர் அருகே தனியார் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து
கடலூர்: கடலூர், வடலூர் அருகே தனியார் பேருந்து, வேன் மோதிய விபத்தில் 25 பெண்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக ஏரியில் கவிழாமல் நூலிழையில் வேன் தப்பியது. குறுகிய சாலையில் சென்ற பேருந்தை பொருட்படுத்தாமல் எதிரே வேன் வந்ததால் விபத்து நடந்துள்ளது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது
Advertisement
Advertisement