கடலூர்: கடலூர் மாவட்டம் மேல் புவாணி குப்பம் பகுதியிலிருந்து காடாம் புலியூருக்கு முந்திரி கொட்டை உடைக்கும் கம்பெனிக்கு பெண்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வடலூரிலிருந்து பெருமாள் ஏரிக்கரை வழியாக பரம்பிபேட்டைக்கு பயணிகளை ஏற்றி கொண்டு வந்த தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மேல் புவாணி குப்பம் பகுதியில் பெருமாள் ஏரிக்கரையில் தனியார் பஸ்சும், வேணும் மோதி விபத்து ஏற்பட்டது. அதிஷ்டவசமாக அருகாமையில் பெருமாள் ஏரியில் கடல் போல் நீர் காட்சி அளித்து வரும் நிலையில் விபத்து ஏற்பட்டவுடன் அதனுள் கவிழாமல் கரையோரமாக நின்றது.
தனியார் பஸ் மற்றும் வேனில் காயமடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் பேருந்தும், வேணும் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெருமாள் ஏரிக்கரையில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். இந்த நிலையில் வேன் ஆனது சிறிதும் பொருட்படுத்தாமல் நேராக பேருந்தில் மோதிய காட்சி அதற்க்ஜியை ஏற்படுத்தி உள்ளது.
