Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4 மாதங்களில் இல்லாத அளவு சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய் விலை.!!

வாஷிங்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவைச் சந்தித்து உள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை ஒரு பேரல் $71.57 டாலராகக் குறைந்துள்ளது. இது கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு மிகக் குறைந்த விலையாகும்.

மேலும் இந்த விலையானது சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.89 சதவீதம் சரிவடைந்துள்ளதை குறிக்கிறது. சமீபத்திய மோதல்களுக்குப் பிறகு, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் டாங்கர்களின் வரத்து மீண்டும் சீராக தொடங்கியுள்ளது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதை தவிர கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் "மிகவும் சிறப்பாக" நகர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து சந்தை பதற்றம் தணிந்துள்ளதும் கச்சா எண்ணெய் விலை குறைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

போர் பதற்றம் தணிவதற்கான அறிகுறிகள் தெரிவதாலும், எண்ணெய் விநியோகம் சீரடைவதற்கான எதிர்பார்ப்புகளின் விளைவாகவும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மார்ச் மாதம் முதல், இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.