Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

செழித்து வளரும் சிறுதானிய ரகங்கள்!

பெருவிளைச்சல் தரும் சிறுதானிய ரகங்கள் என்ற தலைப்பில் உயர் விளைச்சல் தரும் கேழ்வரகு, சாமை, தினை ரகங்கள் குறித்தும், அவற்றை சாகுபடி செய்யும் முறை குறித்தும் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சிறுதானிய ரகங்கள் குறித்து இந்த இதழில் காண்போம்.

குதிரைவாலி

உயர் விளைச்சல் ரகம் - கோ 2.

பருவம்

இறவையாக சித்திரை, ஆடி, மார்கழிப் பட்டங்களிலும், மானாவாரியாக ஆடி, புரட்டாசி பட்டங்களிலும் குதிரைவாலியைப் பயிரிடலாம்.

இடைவெளி

வரிசைக்கு வரிசை 22 செ.மீ. மற்றும் செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.

விதையளவு

வரிசை விதைப்பிற்கு ஒரு எக்டருக்கு 10 கிலோ விதையும், தூவுவதற்கு ஒரு எக்டருக்கு 15 கிலோ விதையும் தேவைப் படுகிறது.

விதை நேர்த்தி

ஒரு எக்டருக்கு 600 கிராம் அஸோபாஸை தேவையான அரிசிக்கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு கிலோ அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் தொழுஉரம் கலந்து தூவவேண்டும்.

வறட்சி மேலாண்மை

வறட்சிக் காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு சத குளோரைடு அல்லது 1 சதவிகித பிபிஎம் பொட்டாசியம் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

விதைப்பின்போது 20 கிலோ மணிச்சத்து, 20 கிலோ தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். மேலும், 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20-25 நாட்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி மேலுரமாக இட வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

இந்தப் பயிரை பொதுவாக பூச்சிகளும், நோய்களும் தாக்குவதில்லை. ஆதலால் பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வரகு

உயர் விளைச்சல் ரகம் - கோ 3.

பருவம்

ஆடி, புரட்டாசி பட்டங்களில் வரகை மானாவாரி பயிராக பயிரிடலாம்.

இடைவெளி

வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. மற்றும் செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியில் விதைக்கலாம்.

விதையளவு

வரிசை விதைப்பிற்கு ஒரு எக்டருக்கு 10 கிலோ விதையும், தூவுவதற்கு ஒரு எக்டருக்கு 15 கிலோ விதையும் தேவைப் படுகிறது.

விதைநேர்த்தி

ஒரு எக்டருக்கு 600 கிராம் அஸோபாஸை தேவையான அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு கிலோ அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 2 கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.

வறட்சி மேலாண்மை

வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு அல்லது 1 சதவீத பிபிஎம் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

விதைப்பின்போது 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். மேலும், 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20-25 நாட்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி மேலுரமாக இட வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

இந்தப் பயிரை பொதுவாக பூச்சிகளும் நோய்களும் தாக்குவதில்லை. ஆதலால் பயிர்ப் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பனிவரகு

உயர் விளைச்சல் ரகம் - கோ 5.

பருவம்

ஆடி மற்றும் புரட்டாசி பட்டம் ஏற்ற பருவமாகும்.

வறட்சி மேலாண்மை

வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு அல்லது 1 சதவிகித பிபிஎம் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

விதைப்பின்போது 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். மேலும், 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20-25 நாட்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி மேலுரமாக இட வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

இந்தப் பயிரை பொதுவாக பூச்சிகளும், நோய்களும் தாக்குவதில்லை. ஆதலால் பயிர்ப் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இடைவெளி

வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. மற்றும் செடிக்கு செடி 7.5 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.

விதையளவு

வரிசை விதைப்பிற்கு ஒரு எக்டருக்கு 10 கிலோ விதையும், தூவுவதற்கு ஒரு எக்டருக்கு 12.5 கிலோ விதையும் தேவைப்படுகிறது.

விதைநேர்த்தி

ஒரு எக்டருக்கு 600 கிராம் அஸோபாஸை தேவையான அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு கிலோ அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 எக்டருக்கு 2 கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.