Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, குடும்பத் தகராறில் மூதாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே பெலவர்த்தி பக்கமுள்ள காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமமூர்த்தி (72). இவரது மனைவி லட்சுமி(63). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ராமமூர்த்தி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது மனைவி லட்சுமியுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமமூர்த்தி, அருகில் கிடந்த கட்டையால் மனைவியை ஆவேசமாக தாக்கினார். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காமல், அங்கிருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினார். இதில், பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த லட்சுமியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து, ராமமூர்த்தியை கைது செய்தனர்.