Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனைவியுடன் தகராறில் கயிற்றால் இறுக்கி 5 வயது மகனை கொன்று தந்தை தற்கொலை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் வினோத் (30). லேத் பட்டறை தொழிலாளி. இவர், பிரியா (25) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களது 5 வயது மகன் பிரித்திவ். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், கோபித்துக்கொண்ட பிரியா, மகனை கணவருடன் விட்டுவிட்டு, அவர் வேலை செய்யும் இடத்திலேயே கடந்த 2 வாரமாக தங்கி வேலை செய்து வந்தார்.

இதில் விரக்தியடைந்த வினோத் நேற்று அதிகாலை அவர் வேலை செய்யும் லேத் பட்டறையின் உரிமையாளருக்கு வாட்ஸ் அப்பில் தற்கொலை செய்து கொள்வதாகவும், தகவலை தனது பெற்றோரிடம் தெரிவித்து விடுமாறும் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி வினோத்தின் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு அங்கு சென்று பார்த்தார். அப்போது, வினோத் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருப்பதும், கட்டிலில் வினோத் மகன் நைலான் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதும் தெரியவந்தது.