Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி அருேக வீட்டுக்கு அழைத்து வந்து பிரியாணியில் கஞ்சா கலந்து போைதயான சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம்

*வீடியோ எடுத்து மிரட்டிய தோழி கணவருடன் கைது

திருமலை : திருப்பதி அருகே வீட்டுக்கு அழைத்து வந்து தோழிக்கு பிரியாணியில் கஞ்சா கலந்து கொடுத்து போதையானதும் பலாத்காரம் செய்து அதை வீடிேயா எடுத்து பணம் கேட்டு மிரட்டிய தோழியை கணவருடன் போலீசார் கைது செய்தனர்.திருப்பதி நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பி.எல். இறுதியாண்டு படித்து வரும் இளம்பெண் பிரணவ் கிருஷ்ணா. இவர் தன்னுடன் சட்டக்கல்லூரியில் படித்து வந்த கர்னூலைச் சேர்ந்த தனது தோழியை அவ்வப்போது வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். அவ்வாறு அழைத்து செல்லும் பிரணவ் கிருஷ்ணா அந்த பெண் சாப்பிடும் பிரியாணியில் கஞ்சா போடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.

அவ்வாறு கஞ்சா போதையில் தோழி இருக்கும்போது, பிரணவ் கிருஷ்ணாவின் கணவர் கிஷோர் ரெட்டி மூலம் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்து அதனை வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோ, போட்டோக்களை அந்த இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி அந்த இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டார்களாம்.

ஆனால் அவர்களின் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், போலீசார் கணவன்- மனைவி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஏற்கனவே இதேபோன்று வேறு ஒரு பெண்ணிடம் ₹5 லட்சம் வரை பணம் பறித்ததும் தெரியவந்தது. எனவே இவர்கள் வலையில் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருப்பார்கள் என்பதால் அவர்கள் புகார் அளித்தால் அவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து கணவன், மனைவி இருவரையும் எம்.ஆர்.பள்ளே போலீசார் சிறையில் அடைத்தனர்.