Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தந்தை, மகனுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜ்கமல் என்பவரின் குழந்தை, வெங்கடேசன் வீட்டுக்கு சென்று பிரிட்ஜ்ஜை திறந்து வைத்து விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாய் தகராறு மோதலாக மாறிய நிலையில், 2019 ஜூலை 8ம் தேதி வெங்கடேசனை, ராஜ்கமல் மற்றும் அவரது தந்தை செல்வராஜ் ஆகியோர் கத்தியால் குத்தினர். தடுத்த வெங்கடேசனின் உறவினர் ஜெயகாந்தனும் பலத்த காயமடைந்தார். இருவரும் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தந்தை-மகனான செல்வராஜ் மற்றும் ராஜ்கமல் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரகாம் லிங்கன், குற்றம் சாட்டப்பட்ட தந்தை, மகன் இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.