Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிளியனூர் அருகே புதுச்சேரி மதுபாட்டில் விற்றவர் கைது

வானூர் : வானூர் தாலுகா கிளியனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எடையான்குளம் பகுதியில் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கிளியனூர் சப்இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, எடையான்குளம் மாரியம்மன் கோயில் தெருவில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் வைத்து விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் வீட்டின் உரிமையாளரான காதர்பாஷா(56) என்பவரை பிடித்து விசாரித்ததில், புதுச்சேரி மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 29 புதுச்சேரி மதுபாட்டில்கள், கார் மற்றும் ரூ.5500 பணத்தை பறிமுதல் செய்தனர்.