Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மூதாட்டி வீட்டில் நகை திருடிய 4 பேர் கைது

துரைப்பாக்கம்: அடையாறு, இந்திரா நகரை சேர்ந்தவர் சரோஜா (88). இவரது, மகள் வெளியூரில் உள்ளதால் தனியாக வசித்து வருகிறார். கடந்த 20ம்தேதி இவரது வீட்டிலிருந்து 10 சவரன் நகை திருடப்பட்டது. புகாரின்பேரில் திருவான்மியூர் போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில், திருவான்மியூர் பகுதியை சேர்ந்த மனோகரன் (30), ராஜேஷ் (49), புவனேஷ்வரி (32), ராஜாமணி (49) ஆகியோர் நகையை திருடியது தெரியவந்தது. இதில், ராஜாமணி கடந்த மாதம் சரோஜா வீட்டில் தோட்ட வேலை செய்ய சென்றுள்ளார். அப்போது, சரோஜா தனியாக இருப்பதை தெரிந்து, உறவினர்களை அழைத்து சென்று நகை திருடி உள்ளார். போலீசார் நேற்று 4 பேரையும் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 10 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.