Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

இன்ஸ்டாகிராம் காதலனை பார்ப்பதற்கு பெங்களூருவில் இருந்து சென்னை வந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்: இருவர் கைது

அண்ணாநகர்: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் இரவு தொடர்பு கொண்ட இளம்பெண், ‘‘நான், கர்நாடக மாநிலம், மைசூருவை சேர்ந்த 19 வயது இளம்பெண். நான், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தபோது, மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் கடத்தி சென்று, ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளார். என்னை காப்பாற்றுங்கள்,’’ என கதறி அழுதுள்ளார்.

இது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், செல்போன் சிக்னலை வைத்து, மடிப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். பின்னர், அந்த வீட்டில் இருந்த மேலும் பெண் உட்பட இருவரை மடக்கி பிடித்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறுகையில், ‘‘மைசூருவை சேர்ந்த எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆவடியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. அவரை பார்க்க கடந்த 16ம் தேதி ஆவடி வந்தேன். பின்னர், பெங்களூரு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன்.

அப்போது, என்னை ஆட்டோவில் கடத்தி வந்து, ஒரு வீட்டில் அடைத்து, போதையில் பலாத்காரம் செய்தார்,’’ என்றார். கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரித்தபோது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ் (33), கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி ஏற்றிவந்தபோது, மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சகிலா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து, இளம்பெண்ணை கடத்தியுள்ளனர். பின்னர், சதீஷ் அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் விசாரணையில் சதீஷ், சகிலாவுடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.