Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தகாத உறவுக்கு இடையூறு 4 வயது சிறுவன் அடித்துக்கொலை: மற்றொரு சிறுவன் படுகாயம்; தாயின் காதலன் வெறிச்செயல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்தர்மபுரி, ஏப்.12: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே முண்டாசு புறவடை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்(30). சிவில் இன்ஜினியரான இவரது மனைவி பிரியா (24). இவர்களுக்கு ஜஸ்வந்த்(6), தர்சன்(4) என்ற மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும், ஓசூரில் வெவ்ேவறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். பாலச்சந்தர் அங்கேயே தங்கியுள்ளார். பிரியா தினமும் கம்பெனி பஸ்சில் வேலைக்கு சென்று வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ஜஸ்வந்த், தர்ஷன் ஆகியோர் வீட்டிற்கு அருகே உள்ள மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் சிறுவர்கள் இருவரும் மாயமானதை கண்டு, அவர்களது பாட்டி ஜெயா திடுக்கிட்டார்.

இதையடுத்து உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர். அப்போது வீட்டில் இருந்து சுமார் ஒரு கி.மீ., தொலைவில் வனப்பகுதியில், பாறையின் இடுக்கில் தர்சன், ஜஸ்வந்த் இருவரும் ரத்த வெள்ளத்தில் காயத்துடன் கிடந்தனர். இதையடுத்து 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், தர்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜஸ்வந்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அதில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவினரான திருமணமாகாத லாரி டிரைவர் வெங்கடேசன் (27) என்பவருடன், பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே, குழந்தைகள் இருப்பதை காரணம் காட்டி, வெங்கடேசனிடம் நெருங்கிப் பழகுவதை பிரியா தவிர்த்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேசன், நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பிரியாவின் குழந்தைகளை காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று, தர்சனை பாறையில் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் ஜஸ்வந்தை கல்லால் தாக்கியுள்ளார்.

அதில் காயமடைந்து சிறுவன் மயங்கியதால், அவனும் உயிரிழந்து விட்டதாக கருதி அப்படியே விட்டு வெங்கடேசன் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.கோட்டை அருகே முண்டாசு புறவடை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்(30). சிவில் இன்ஜினியரான இவரது மனைவி பிரியா (24). இவர்களுக்கு ஜஸ்வந்த்(6), தர்சன்(4) என்ற மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும், ஓசூரில் வெவ்ேவறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். பாலச்சந்தர் அங்கேயே தங்கியுள்ளார். பிரியா தினமும் கம்பெனி பஸ்சில் வேலைக்கு சென்று வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ஜஸ்வந்த், தர்ஷன் ஆகியோர் வீட்டிற்கு அருகே உள்ள மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் சிறுவர்கள் இருவரும் மாயமானதை கண்டு, அவர்களது பாட்டி ஜெயா திடுக்கிட்டார்.

இதையடுத்து உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர். அப்போது வீட்டில் இருந்து சுமார் ஒரு கி.மீ., தொலைவில் வனப்பகுதியில், பாறையின் இடுக்கில் தர்சன், ஜஸ்வந்த் இருவரும் ரத்த வெள்ளத்தில் காயத்துடன் கிடந்தனர். இதையடுத்து 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், தர்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜஸ்வந்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அதில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவினரான திருமணமாகாத லாரி டிரைவர் வெங்கடேசன் (27) என்பவருடன், பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே, குழந்தைகள் இருப்பதை காரணம் காட்டி, வெங்கடேசனிடம் நெருங்கிப் பழகுவதை பிரியா தவிர்த்து வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேசன், நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பிரியாவின் குழந்தைகளை காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று, தர்சனை பாறையில் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் ஜஸ்வந்தை கல்லால் தாக்கியுள்ளார். அதில் காயமடைந்து சிறுவன் மயங்கியதால், அவனும் உயிரிழந்து விட்டதாக கருதி அப்படியே விட்டு வெங்கடேசன் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.