நெருக்கமாக இருந்த புகைப்படத்தை காட்டி மிரட்டி தொழிலில் பார்ட்னராக சேர்ந்த பெண்ணிடம் ரூ2.5 லட்சம் பறிப்பு: ஓட்டல் உரிமையாளர் கைது
பெரம்பூர்: ஐயப்பன் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (36, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், வியாசர்பாடி திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்த கோகுல்நாத் (33) என்பவர் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் நடத்தி வரும் செட்டிநாடு உணவகத்திற்கு ₹7.50 லட்சம் கொடுத்து பார்ட்னராக சேர்ந்துள்ளார். அதன் பிறகு கோகுல்நாத் உஷாவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் உஷாவுடன் பழகியதை போட்டோ எடுத்து வைத்துக்கொண்ட கோகுல்நாத், பின்னர் தனது நண்பரான தீபன் என்பவருக்கு அவசரத் தேவையாக ₹2.50 லட்சத்தை உஷாவிடம் வாங்கி கொடுத்துள்ளார்.
சிறிது காலம் கழித்து உஷா அந்த பணத்தை திருப்பி கேட்டபோது, நீயும் நானும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை உனது கணவருக்கு அனுப்பி விடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார். புகாரின்பேரில், பெரவள்ளூர் போலீசார் நேற்று முன்தினம் கோகுல்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


