Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை ஆம்னி பஸ்சில் ரூ.35 லட்சம் ஹவாலா பணம்

கடலூர்: கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து நாகப்பட்டினம் சென்ற ஒரு தனியார் ஆம்னி பஸ்சில் வந்த வாலிபரிடம் ரூ.35 லட்சம் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. அந்த வாலிபர் தான் சென்னைக்கு சென்று பணத்துக்கான ஆவணங்களை எடுத்து வருவதாக கூறினார்.

இதனால் போலீசார் ரூ.35 லட்சத்தை கடலூர் புதுநகர் காவல் நிலையத்திலேயே வைத்துவிட்டு, அந்த வாலிபரை அனுப்பி வைத்தனர். அந்த வாலிபர் பணத்துக்கு உரிய ஆவணங்களை கொண்டு வந்தால் பணம் அவரிடம் ஒப்படைக்கப்படும். இல்லையென்றால் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.