Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு பெட்டி கடை உரிமையாளர் போக்சோவில் கைது

அண்ணாநகர், : சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெட்டி கடை உரிமையாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.  சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது, எனது பகுதியில் பெட்டிக்கடை நடத்திவரும் பஞ்சவர்ணம்(79) என்பவரிடம் பொருட்கள் வாங்க சென்றபோது எனது 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் வழக்குபதிந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினார். மேலும், பஞ்சவர்ணத்தின் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.