Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மாஜி எஸ்ஐ கொலை 4 பேருக்கு குண்டாஸ்

நெல்லை: நெல்லை டவுன் தொட்டிபால தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ ஜாஹிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18ம் தேதி நிலபிரச்னை காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கிருஷ்ணமூர்த்தி (எ) முகம்மது தௌபிக் (35), அக்பர்ஷா(33), பீர் முகம்மது(37), கார்த்திக் என்ற அலி ஷேக் (32) மற்றும் 17 வயது இளஞ்சிறார் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது தௌபிக்கின் மனைவி நூருல் நிஷாவை (36) நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் முகம்மது தௌபிக், அக்பர்ஷா, பீர் முகம்மது, கார்த்திக் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமானிக்கு மாநகர துணை கமிஷனர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்காக உத்தரவை பாளை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.