Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கள்ளக்காதல் விவகாரம்; மனைவியை கத்தியால் குத்திய அதிமுக நிர்வாகி தப்பி ஓட்டம்

கம்பம்: தேனி மாவட்டம், சின்னமனூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைக்கனி (43). இவர் சின்னமனூர் அதிமுக நகரச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி மகாலட்சுமி (38). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பிச்சைக்கனிக்கும் கம்பம் கக்கன் காலனியில் வசித்த ஒரு பெண்ணுக்கும் தகாத உறவு இருந்து வந்தது. நேற்று தனது காதலியின் வீட்டில் பிச்சைக்கனி இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி மகாலட்சுமி, கணவரை கண்டித்து வீட்டிற்கு அழைத்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பிச்சைக்கனி, மகாலட்சுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். காயமடைந்த மகாலட்சுமி கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து பிச்சைக்கனியை தேடி வருகின்றனர். இவர் கடந்தாண்டு தனது வீட்டின் மீது ஆதரவாளரை கொண்டே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, மர்ம நபர்கள் குண்டு வீசியதாக நாடகமாடி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.