Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக 17 பேரிடம் ரூ.60.50 லட்சம் மோசடி; அங்கன்வாடி பெண் பணியாளர் கைது

ஈரோடு : ஈரோடு ஜீவானந்தம் சாலை புதுமை காலனியை சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி கிருஷ்ணவேணி (47). அங்கன்வாடி பணியாளர். கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தனக்கு பழக்கமாகும் நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். கிருஷ்ணவேணி கூறியதை உண்மை என நம்பி 17 பேர் ரூ.60 லட்சத்து 50 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்று கொண்ட கிருஷ்ணவேணி அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பிக்கை தெரிவித்து வந்துள்ளார். ஆனால், அவர் கூறியபடி வேலை வாங்கி தராததால், பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.

பணத்தை சீக்கிரம் தருவதாக கிருஷ்ணவேணி கூறினாலும், பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், பணம் செலுத்தியவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இதையடுத்து அவர்கள் ஈரோடு அடுத்த அவல்பூந்துறையை சேர்ந்த சுரேஷ் (44) என்பவர் தலைமையில் தனித்தனியாக ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, கிருஷ்ணவேணி மீது மோசடி வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் கிருஷ்ணவேணியை கைது செய்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணவேணியை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.