Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து உல்லாசம் காதலிப்பதாக ஏமாற்றி 20 மாணவிகள் பலாத்காரம்: வீடியோ, போட்டோ எடுத்து மிரட்டல்; கல்லூரி மாணவர் அதிரடி கைது

கோவை: கோவையில் காதலிப்பதாக கூறி 20க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் நாகர்கோவில் வாத்தியார்விளையை சேர்ந்தவர் ஸ்ரீ தர்சன் (22). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்ஏ ஆங்கில இலக்கியம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். பி.கே. புதூர் பகுதியில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி அங்கிருந்து கல்லூரிக்கு சென்றுள்ளார். உடன் படித்து வந்த 19 வயது மாணவியுடன் பழகினார். காதலிப்பதாக கூறி அந்த மாணவியை தான் தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி அழைத்து சென்றார். அங்கே அவர் மாணவியுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.

சில மாதங்களில் ஸ்ரீதர்சன் 21 வயதான இன்னொரு கல்லூரி மாணவியுடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. அவரையும் தான் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து சென்று தொடர்பு வைத்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த 2 மாணவிகளையும் ஒதுக்கிவிட்டு இன்னொரு மாணவியை காதலிப்பதாக கூறி பழகியுள்ளார். அந்த மாணவியை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அவர் யாருமில்லாத இடத்திற்கு தனியாக வர மாட்டேன் என பிடிவாதமாக கூறிவிட்டார்.

ஆனால் அவரை விடாமல் ஸ்ரீ தர்சன் வற்புறுத்தி வந்துள்ளார். ஏற்கனவே அவரை காதலித்த மாணவிகளுக்கு ஸ்ரீ தர்சனின் உல்லாச லீலை தெரியவரவே ஒதுங்கி சென்றுள்ளனர். ஆனால் ஸ்ரீ தர்சன் அவர்களை மீண்டும் பாலியல் உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். அவர்கள் மறுத்தபோது பொது இடத்தில் ஆபாசமான வார்த்தைகளில் திட்டியதோடு, ‘‘பாலியல் உறவு தொடர்பான போட்டோ, வீடியோக்களை வைத்திருக்கிறேன். இவற்றை அனைவருக்கும் அனுப்பி விடுவேன்’’ எனக்கூறி மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் மாணவிகளிடம் ஸ்ரீ தர்சன் அத்துமீறிய விவகாரம் கல்லூரி வட்டாரத்தில் பூதாகரமாக பரவ ஆரம்பித்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 2 மாணவிகள் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பிஎன்எஸ் சட்ட பிரிவு 75, 79, 296 பி, 351 (2) (பாலியல் துன்புறுத்தல், தகாத முறையில் பேசுதல், மிரட்டுதல், வன்முறை செய்யும் வகையில் எச்சரித்தல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்ட பிரிவின் படி வழக்குப்பதிந்து, ஸ்ரீ தர்சனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

ஸ்ரீ தர்சன் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது காண்டம் பாக்கெட்டுகள் ஏராளமாக கிடந்துள்ளன. திரைப்படத்தில் வருவதுபோல் இவர் காதலிப்பதாக நடித்து பல மாணவிகளை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. 20க்கும் மேற்பட்ட மாணவிகளை இப்படி பழகி ஏமாற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் ஸ்ரீ தர்சனின் செல்போனை ஆய்வு செய்தபோது ஏராளமான ஆபாச போட்டோ, வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. இந்த போட்டோக்களை யாருக்காவது அனுப்பியிருக்கிறாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆண்கள் யாரையும் ஸ்ரீ தர்சன் தன் வீட்டிற்கு அழைத்து வருவதில்லையாம்.

தன் வீட்டின் அருகே யாருமில்லை என உறுதி செய்த பின்னர் மாணவிகளை செல்போனில் அழைத்து வரவழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவரின் காதல் வலையில் விழுந்த சில மாணவிகள் தங்களது எதிர்காலம் பாழாகி விடும் என்ற அச்சத்தில் வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மாணவிகள் மட்டுமின்றி அந்த ஏரியா பகுதியை சேர்ந்த வேறு சில பெண்களும் இவரின் காதல் லீலையில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இவரின் செல்போன் பதிவு, ஏமாந்த மாணவிகளின் விவரங்களை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கல்லூரி மாணவிகள் காதல் போர்வையில் ஏமாற்றும் நபர்களிடம் மிகுந்த உஷாராக இருக்க வேண்டும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். கோவையில் கல்லூரி மாணவர் நடத்திய இந்த பாலியல் லீலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.