Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தையை கொன்று தாய் தற்கொலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி வடந்தையூர் பகுதியை சேர்ந்தவர் அக்பர்(27). இவர் போட்டோ ஸ்டூடியோவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தஸ்லீம்பானு (20). இவர்களது ஆண் குழந்தை ஆத்தீப் (9 மாதம்). தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் பாப்பிரெட்டிப்பட்டி சென்றிருந்த அக்பர் நேற்று மாலை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அவர் நீண்டநேரமாக தட்டியும் தஸ்லீம்பானு கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்பர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு தஸ்லீம்பானு தூக்கில் தொங்குவது தெரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்பர் கதவை உடடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

அப்போது அங்கு குழந்தை ஆத்தீப்பின் இடது கை மணிக்கட்டில் பிளேடால் அறுக்கப்பட்டு ரத்தம் வெளியேறி அவனும் இறந்து கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தஸ்லீம்பானு மற்றும் குழந்தை ஆத்தீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையின் கை மணிக்கட்டை பிளேடால் முதலில் அறுத்து கொன்றுவிட்டு, தஸ்லீம்பானு தனது இரண்டு கைகளையும் அறுத்துள்ளார். அதன்பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.