Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல்

சென்னை: திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட 2 லாரிகளை நிறுத்த முயன்றபோது அந்த லாரியை மடக்கி பிடித்தனர். லாரியை ஓட்டி வந்தது ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணய்யா (40) மற்றும் திருப்பதி வெங்கடகிரி டவுன் பகுதியைச் சேர்ந்த கோபி (46) என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த லாரியை சோதனை செய்தபோது அந்த 2 லாரிகளிலும் 12 யூனிட் ஆற்று மணல் இருப்பது தெரியவந்தது.

லாரியின் உரிமையாளர் சுப்பிரமணி என்பவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆற்று மணலை தமிழகத்திற்கு எந்தவித அரசு அனுமதியோ உரிமமோ இன்றி சுயலாபத்திற்காக ஆற்றின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் திருட்டுத்தனமாக மணலை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுனர்கள் வெங்கடகிருஷ்ணய்யா மற்றும் கோபி ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் லாரி மற்றும் 12 யூனிட் மணலை பறிமுதல் செய்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.