பெரம்பூர்: புளியந்தோப்பு வீரா செட்டி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (52). ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு செங்கேணி அம்மன் கோயில் முன், இவர், தனது தங்கையின் கணவர் செல்வம் (48) என்பவருடன் மது குடித்துள்ளார். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த செல்வம், ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோவிந்தராஜின் கழுத்து பகுதியில் வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்படி, செல்வத்தை நேற்று போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


