தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு.. 100 நாட்களில் 546 குற்றச் சம்பவங்கள்.. அமைச்சர்களை ஓடவிட்டதுதான் 100 நாள் சாதனை: பரந்தாமன் விளாசல்

 

Advertisement

சென்னை: தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் நடந்த குற்றங்கள் தொடர்பான காணொளியை திமுக வெளியிட்டது. தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பரந்தாமன்; விஜய் தலைமையிலான சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியில் 100 நாட்களில் 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; இதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். போதைப்பொருள் பற்றி தகவல் தந்த மாணவர்களுக்கே பாதுகாப்பு தர முடியவில்லை.

கொலை பழியை முதலமைச்சர் விஜய் ஏற்று கொள்ள வேண்டும். விஜய் தலைமையிலான ஆட்சியில் தவெகவில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்று மக்களுக்கு தெரியும். இளைஞர்கள் மூலமாக ஆட்சிக்கு வந்ததாக தவெக அரசு கூறுகிறது. போதைப்பொருள் பற்றி மாணவர் அளித்த ஒரு தகவலை கூட உங்களால் ரகசியமாக வைக்க முடியவில்லை. 100 நாள் தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகனை மக்கள் ஓடவிட்டதுதான் 100 நாள் ஆட்சியின் சாதனை.

இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக முதலமைச்சர் விஜய் இருக்கிறார். சினிமா படத்தில் நடிப்பது போல விஜய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியினரை கைது செய்யும் ஆர்வம், குற்றவாளிகளை கைது செய்வதில் இல்லையே? ஒன்றிய அரசிடம் பம்மும் முதலமைச்சர், சட்டப்பேரவையில் பாயும் முதல்வராக இருக்கிறார். சட்டம்-ஒழுங்கு பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார். ஷாக் அடிக்கும் வகையில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது.

அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை ; எதிர்க்கட்சி மீதுதான் நம்பிக்கை உள்ளது. 100 நாட்களில் ரூ. 15,000 கோடி முதலீடு வந்துள்ளதாக நிதியமைச்சர் பொய்யான தகவல் கூறுகிறார். தவெக அமைச்சர்களுக்கு அடிப்படை புரிதல் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

Related News