நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்ற சாதனையாளர் கர்ண் ஷர்மா (38 வயது,லெக் ஸ்பின்னர்), அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடி உள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என தொடர்ச்சியாக 3 வெவ்வேறு அணிகளுக்காக ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை கர்ண் ஷர்மா தன் வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் தர கிரிக்கெட்டில் அவர் 270 விக்கெட் மற்றும் 2,866 ரன் எடுத்துள்ளார்.




