Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கிரிக்கெட் பைபிள் ‘விஸ்டன்’ புகழாரம்: உலகின் சிறந்த வீரராக பும்ரா தேர்வு; சிறந்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

லண்டன்: பிரிட்டனில் இருந்து வெளியாகும், விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் எனப்படும் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான செய்திகளை வெளியிடும் புத்தகம், ‘கிரிக்கெட் உலகின் பைபிள்’ என அழைக்கப்படுகிறது. இது, ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் நிகழ்த்திய அருஞ்சாதனைகளை பாராட்டும் வகையில், இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ராவையும், இந்திய அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவையும் உலகின் சிறந்த வீரர், வீராங்கனையாக விஸ்டன் தேர்வு செய்து அறிவித்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டில், 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக பும்ரா உருவெடுத்தார். சராசரியாக வெறும் 20 ரன் விட்டுக் கொடுத்து இந்த சாதனையை அவர் அரங்கேற்றினார். ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில், பும்ரா, தனி ஒருவராக சிறப்பாக ஆடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார சாதனை படைத்ததாக, விஸ்டன் புகழாரம் சூட்டி உள்ளது. அதேபோல், இந்திய வீராங்கனை மந்தனா, 2024ல், அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும், 1659 ரன்களை குவித்து மகத்தான சாதனையை நிகழ்த்தியதாக விஸ்டன் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் சிறந்ததொரு சாதனை அது என்றும், ஒரு நாள் போட்டிகளில் அவர் 4 சதங்களை விளாசியது மற்றொரு அரிய சாதனை என்றும் விஸ்டன் புகழாரம் சூட்டியுள்ளது.