பட்டாசு ஆலை விபத்தில் பலியான 2 பேரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Advertisement
விபத்தில் காயம் அடைந்த செல்வம் (21), பிரசாந்த் (20), செந்தூர்கனி (45), முத்துமாரி (41) ஆகியோருக்கு திருநெல்வேலி மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். வெடிவிபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement