Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயலாளர்கள், அதிகாரிகள் சரியாக பின்பற்ற வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை அமர்வில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது நடந்தேறி வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் சார்ந்து துறைகள் மீது அதிகளவில் அவமதிப்பு வழக்குகள் பதியப்படுகின்றன. அண்மையில் உயர்நீதிமன்றத்தால் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும் விதமாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நீதிமன்ற அளிக்கும் உத்தரவினை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வழக்கு விசாரணையின் போது அதிகாரிகள் கட்டாயம் ஆஜராகி உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது அரசு மூத்த வழக்கறிஞர்கள் கொடுத்த அறிவுறையின் படி செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.