சென்னை: போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றதாக, அளித்த புகாரை திரும்ப பெறக் கோரி மிரட்டல் விடுத்த நிலையில், காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது
சென்னை வடபழனி குமரன் காலனியில் 1800 சதுர அடி நிலத்த்துக்கு போலியான, சில ஆவணங்கள் தயாரித்தாக எஸ். சூர்யா என்பவர், கொடுத்த புகாரின் பெயரில், வடபழனியை சேர்ந்த பால்துரை உற்பட 3 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கில் பால்துரை என்பவர் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார், இந்த மனுதான் நீதிபதி என். ரமேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது பொது பால்துரை மீதான புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்க விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த முன் ஜாமீன் மனு நீதிபதி என்.ரமேஷ் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது பால்துறைக்கு எதிரான புகாரை வாபஸ் பெரும் படி புகார்தாரர் சூர்யவை இன்ஸ்பெக்டர் மிரட்டியதாகவும், அதை ஏற்காத சூர்யா மீது பால்துரை மனைவி குடுத்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பொய் வழக்கு தொடரப்பட்டது என்றும் இந்த வழக்கில் சூர்யா கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் முன் ஜாமீன் கோரிய பால்துரை தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர்களான முணிசேகர், ராஜேஷ் ஆகியோர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவித்துருக்கிறார்.
கோயம்பேடு காவல் மாவட்ட எல்லையை தவிர்த்து, இணையாணர் அந்தஸ்து இருக்கக்கூடிய அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தில், டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.


