தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்; ஆனால், அதிகாரிகள் திருப்பி அனுப்புகிறார்கள் : உயர்நீதிமன்றம் கருத்து

Advertisement

மதுரை : இளைஞர்கள் தாமாக முன்வந்து கால்வாய்களை தூர்வார அனுமதி கோரியும் ஏன் அனுமதி வழங்கவில்லை என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நீர் வரத்து கால்வாய்களை தூர்வார அனுமதி வழங்க கோரி தன்னார்வலர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில்,"ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. முட்புதர்கள் மண்டி நீர் செல்ல முடியாத நிலை, விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், பல்வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.

ஆதலால் சீமை கருவேல மரங்களை அகற்றி கால்வாய் தூர்வார எங்களது தொண்டு நிறுவனத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தோம். ஆனால் கால்வாயைத் தூர்வார மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொண்டு செய்ய வருகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பை தரவில்லை. எனவே நீர்வரத்து கால்வாய்களைத் தூர்வார தங்கள் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், "இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்,"தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார். ஆனால் இங்குள்ள அதிகாரிகளின் பொறுப்பின்மையால் முதலீடு செய்பவர்கள் திரும்பி விடுகின்றனர்.ஆயிரம் இளைஞர்கள் ஆர்வமாக தொண்டு செய்ய வந்தாலும் அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை. இளைஞர்கள் தாமாக முன்வந்து கால்வாய்களை தூர்வார அனுமதி கோரியும் ஏன் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை?. கால்வாயைத் தூர்வார அனுமதி கோரிய மனு மீது ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க ஆணையிடுகிறோம், "இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Related News