பஞ்சு விலை உயர்வால் செப்டம்பர் மாத நூல் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்துவதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளன. கடந்த 9 மாதங்களில் நூல் விலை ரூ.82 வரை உயர்ந்துள்ள நிலையில், ஒரு கேண்டி பஞ்சின் விலை ரூ.74,000-ஆக அதிகரித்துள்ளது. இதனால் பின்னலாடைத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement



