தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவெகவினரின் லஞ்ச பழக்கவழக்கம் மாறுவதற்கு கொஞ்சம் காலம் ஆகும்: ஓவர் முட்டு கொடுக்கும் காங். மாநில தலைவர்

 

Advertisement

விருதுநகர்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம்தாகூர் எம்பி, விருதுநகரில் நேற்று அளித்த பேட்டி: லஞ்சமில்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான தொடக்கப்பணிகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு மிகச் சிறப்பாக முன்னெடுத்துள்ளது. தற்போதைய புதிய அரசு அமைந்து 60, 70 நாட்கள்தான் ஆகிறது. தூய்மையான நிர்வாகத்தைக் கொண்டுவர முதலமைச்சர் விஜய் மிக உயர்ந்த லட்சியத்தோடு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கீழ்மட்ட நிர்வாகி ஒருவர் செய்யும் தவறை, ஒட்டுமொத்தத் தலைவரின் உயர்ந்த கொள்கையோடு ஒப்பிடக் கூடாது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும். தேர்தலுக்கு முன்பும் பின்பும் பல கட்சிகளில் இருந்தும் தவெகவிற்கு ஆட்கள் உள்ளே வந்திருப்பதால், அவர்களின் பழைய லஞ்ச பழக்கவழக்கங்கள் மாறுவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

‘கட்சியை அழிப்பதில் கிளாசிக் எக்ஸாம்பிள்தான் எடப்பாடி’

‘‘எம்ஜிஆர் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கம் அதிமுக. ஜெயலலிதாவும் பல சோதனைகளை கடந்து அந்த இயக்கத்தை காப்பாற்றினார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு மாபெரும் பேரியக்கத்தை எப்படி எல்லாம் சிதைத்து, ஒட்டுமொத்தமாக அழிக்க முடியும் என்பதற்கு ஒரு கிளாசிக் எக்ஸாம்பிள்தான் எடப்பாடி பழனிசாமி. 2016ல் தொடங்கி 2026 தேர்தல் வரை அதிமுகவை 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட் இழக்கச் செய்த பெருமை அவரையே சாரும்.

ஒரு கட்சியை எப்படி அழிக்க வேண்டும் என்று யாராவது பிஎச்டி ஆராய்ச்சி செய்தால், அதில் எடப்பாடி பழனிசாமிதான் முதன்மை கதாபாத்திரமாக இருப்பார். அவர் அடுத்தவர்களை விமர்சிப்பதை விடுத்து, முதலில் தன் கட்சியை பிழைக்க வைக்கும் வழியை பார்க்கட்டும்’’ என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார்.

Advertisement

Related News