கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி நரம்பு மண்டலத்தில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும்: ஆய்வில் தகவல்
பெங்களூரு: பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிமான்ஸ்) நடத்திய ஒரு ஆய்வில், கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி இரண்டும் ஒரு சிறிய சதவீத மக்களின் மனித மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று தெரியவந்துள்ளது. மார்ச் மற்றும் செப்டம்பர் 2020க்கு இடையில் நரம்பியல் அறிகுறிகளுடன் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் சிகிக்சைக்கு வந்த 3,200 நோயாளிகளை இந்தக் குழு ஆய்வு செய்தது.
இவர்களில் 120 நோயாளிகளுக்கு நரம்பு மண்டலம் தொடர்பான கோளாறுகளை உருவானது.47% பேருக்கு நினைவு இழப்பு அல்லது மனக் குழப்பம் ஏற்பட்டது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 116 நபர்களை ஆய்வு செய்தனர். இவர்களில், 29 பேருக்கு நோய் எதிர்ப்பு தொடர்பான நரம்பியல் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி பெற்ற 27 பேரும், கோவாக்சின் பெற்ற 2 பேரும் அடங்குவர்.