மல்லிகை சாகுபடியில் சில புழு, பூச்சிகளின் தாக்குதல் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும். அவற்றைக் கட்டுப்படுத்த சில குறிப்புகள்:
மொட்டுப்புழு: இவை இளம் மொட்டுக்களை தாக்கி அழிக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
சிலந்திப் பூச்சி: இவை இலைகளைக் கடித்து சேதப்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 0.2 சதவீதம் என்ற அளவில் தெளிக்கலாம்.
நூற்புழு: மண் மாதிரி எடுத்து நூற்புழு தாக்குதலைக் கண்காணிக்க வேண்டும். தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் வெளிறிய இளம் மஞ்சளாகி பின்னர் கருகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த 10 கிராம் டெமிக் குருணை மருந்தினை வேர்ப்பாகத்தின் அருகில் இட்டு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
இலைகள் மஞ்சளாதல்: இலைகள் மஞ்சளாவது, இரும்புச்சத்து குறைபாடு, வேர் அழுகல் மற்றும் வேர்ப்புழு தாக்குதலால் உண்டாகிறது. இரும்புச்சத்து குறைபாட்டினால் இலைகள் மஞ்சளாவதைத் தடுக்க லிட்டருக்கு 5 கிராம் பெர்ரஸ் சல்பேட் கரைசலை 3 மாதங்களுக்கு ஒருமுறை தெளிக்கவேண்டும். வேர் அழுகலுக்கு காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25 சதவீதம் கரைசலை செடியைச் சுற்றி மண்ணில் ஊற்றவேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களில் குண்டுமல்லியை பயிர் செய்வதன் மூலம் இந்நோய் வராமல் கட்டுப்படுத்தலாம்.

