கூட்டுறவு சங்க வங்கிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 15ம் தேதி சென்னையில் நேர்முக தேர்வு
சென்னை: கூட்டுறவு சங்க வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வருகிற 15ம் தேதி சென்னையில் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கூட்டுறவு துறை துணை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமை கூட்டுறவு சங்க வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் 06.08.2025 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான எழுத்து தேர்வு 05.10.2025 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. எழுத்து தேர்வின் முடிவுகள் 06.11.2025 அன்று மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 15.11.2025 சென்னையில் உள்ள Institute of Leather Technology, CIT Campus, Taramani, Chennai - 600113 நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதி சீட்டினை மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் இருந்து (www.tncoopsrb.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.