Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குன்னூர், கோத்தகிரியில் கடும் பனிமூட்டத்துடன் கனமழை: வாகன ஓட்டிகள் கடும் அவதி!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டத்துடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தினசரி வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாகப் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

குன்னூர் - கோத்தகிரி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்குப் பனிமூட்டம் நிலவுவதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் செல்கின்றன. இதற்கிடையே, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்குச் செல்லும் வாகனங்கள் தற்போது கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

கோத்தகிரி வழியாக அதிக அளவில் வாகனங்கள் சென்று வரும் நிலையில், கடும் பனிமூட்டம் மற்றும் மழை காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகனங்கள் மெதுவாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பனிமூட்டத்தால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.