*தாகம் இல்லாவிட்டாலும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் அவசியம்.
*இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு, நுங்கு, கேழ்வரகுக் கூழ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*நீர்ச் சத்து நிறைந்த பழங்கள் அதாவது தர்பூசணி, வெள்ளரிக் காய், ஆரஞ்சு, திராட்சை, முலாம் பழம் ஆகியவற்றை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*காரமான, எண்ணெய் நிறைந்த, வறுத்த மற்றும் சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
*பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
* வெளியே செல்லும்போது குடை, தொப்பி, கூலிங்கிளாஸ் பயன் படுத்த வேண்டும்.
*மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
* தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் சூட்டைக் குறைக்கும்.
*வியர்க்குரு இருந்தால், பனை நுங்கு, சந்தனம் உடலில் பூசலாம்.
*ஜன்னல்களை பகலில் மூடி வைத்து, இரவில் திறந்து வைப்பது, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
*வீட்டைச் சுற்றி செடிகள் வளர்ப்பது வெப்பத்தைக் குறைக்கும்.
*சன் ஸ்க்ரீன் பயன்பாடு மிக அவசியம்.
*இரவில் மேக்கப் கலைத்து முகம் கழுவி மாய்ஸ்சர் பயன்படுத்தலாம்.
- விஜயலட்சுமி.


